பளை பகுதியில் 30 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு!

பளை பகுதியில் 30 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று (12) மீட்கப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது குறித்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.

14 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட கேரள கஞ்ஞாவின் பெறுமதி 105 இலட்சம் ரூபாவாகும்.

குறித்த விவகாரம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply