பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பரசன்கஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது.
குடும்பத் தகராறு முற்றியதில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
