சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்றையதினம் (16) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தரும் அவர் எதிர்வரும் புதன்கிழமை வரை இங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய தரப்பினரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ‘டிட்வா’ சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து அவதானிக்கவுள்ளதுடன், இலங்கையை மீண்டும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும் கலந்துரையாடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply