நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது!

நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இன்று (17) அதிகாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைதான நபரிடம் இருந்து 12,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அலகினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply