அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் இன்று (17) கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரையும், மேலதிக விசாரணைக்காக நாளை (18) வரை தடுத்து வைத்து விசாரிப்பதற்கு கடுவெல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
