இந்தியாவில் நடைபெறும் ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்தியா பயணம்!

இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) பிற்பகல் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ‘AI Impact’ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு விசேட அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைக் குழுவினர் இன்று பிற்பகல் 02.05 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply