பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) மாலை அந்நாட்டுப் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்களாதேஷின் புதிய பிரதமருக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் போது பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கும் அவர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், பங்களாதேஷின் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அதிகளவில் ஈர்ப்பது, சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துவது மற்றும் மருந்து உற்பத்தித் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் பங்களாதேஷிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
