கொழும்பு, பாலத்துறை பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் சென்றபோது கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை நேற்று (19) மாலை முன்னெடுக்கப்பட்டது.
54 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் சென்றபோது, போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் பாலத்துறை பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவுள்ளதாக இரகசியத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பதுங்கியிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை மாத்திரை தொகுதியுடன் கைது செய்துள்ளனர்.
கைதான நபரிடம் இருந்து சுமார் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த மாத்திரைகளை மொத்தமாகப் பல்வேறு நபர்களுக்கு விநியோகித்து வந்தமை தெரியவந்துள்ளது.
கைதான சந்தேகநபர் இன்றையதினம் (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
