வாக்குவாதம் முற்றி மருமகனைக் கொன்ற மாமனார்!

தெரணியகலை, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலைப் பிரிவில் மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதையடுத்து மாமனார் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மருமகன் உயிரிழந்தார்.

33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடித்த சம்பவம் நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த மருமகன், பிரதேசவாசிகளால் தெரணியகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையைச் செய்த பின்னர் மாமனார் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தெரணியகலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply