இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!

வாத்துவ – மொரந்துடுவ வீதியின் மெலேகம பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது இரண்டு பேருந்துகளிலும் பயணிகள் எவரும் இருக்கவில்லை.

விபத்தில் இரண்டு பேருந்து சாரதிகளும் காயமடைந்த நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு சாரதிகளில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply