தரம் 06ஆம் வகுப்புக்கான புதிய கற்றல் தொகுதிகளின் இறுதி மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவெ தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை செயல்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான விளக்கங்களையும், பயிற்சிகளையும் வழங்கும் வகையில் விரைவில் சிறப்பு பயிற்சி திட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவெ தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த புதிய கல்வித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
