ஈரானில் இணைய சேவை முடக்கம்!

ஈரானில் இணைய வசதிகள் கடுமையாகக் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய நிலப்பரப்பின் மீது நடத்திய பாரிய தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய பதில் தாக்குதல்கள் இடம்பெற்றுச் சில மணிநேரங்களின் பின்னர், அந்நாட்டின் இணைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

உலகளாவிய இணையச் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ‘கென்டிக்’ நிறுவனத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களின் பின்னர் ஈரானின் இணையத் தொடர்புகளில் சடுதியான வீழ்ச்சி காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் உலகளாவிய இணைய அணுகலில் சுமார் 99% தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஈரானிய அரசாங்க அதிகாரிகள் அல்லது அரசாங்கத்தின் நம்பிக்கையைப் பெற்ற நபர்களுக்குச் சொந்தமான குறிப்பிட்ட சில கணக்குகள் மட்டுமே தற்போது செயலில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச இணையத் தொடர்புகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ள போதிலும், ஈரானுக்குள் இயங்கும் உள்ளூர் இணையத்தளங்கள் மற்றும் தகவல் பரிமாற்றக் கட்டமைப்புகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்த 2026 ஜனவரி மாதத்தில் நிலவிய பதற்றமான சூழ்நிலையின் போதும், ஈரான் இவ்வாறு நாடு முழுவதும் இணையத்தைத் துண்டிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply