TIN இலக்கம் கட்டாயமாகிறது!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும்.

அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது,

ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல்.

கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்.

மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்.

காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல்.

வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல்.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல்.

கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply