இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில் லெபனானில் புதிய முற்றுகை!

இஸ்ரேலிய எல்லைக் கிராமங்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கும் வகையில், லெபனானில் மேலதிக மூலோபாய இடங்களை நோக்கி முன்னேறி அவற்றைக் கைப்பற்ற இஸ்ரேலிய இராணுவத்திற்குத் தானும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஹிஸ்புல்லா இலக்குகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட கேட்ஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அந்த அமைப்பு “பாரிய விலையைக் கொடுத்துள்ளது – அது தொடரும்” என்றும் கூறினார்.

நாட்டின் வடக்கு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், கலிலி (Galilee) பகுதி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறித்த வாக்குறுதியை இஸ்ரேல் நிறைவேற்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply