ICC T20உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென்னாபிரிக்கா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் தென் ஆப்பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் 2-வது முறையாக மோத உள்ளன. இந்த இரு அணிகளும் லீக் சுற்றில் மோதி இருந்தன. இதில் 176 ஓட்டங்கள் இலக்கை துரத்தியிருந்த தென் ஆப்பிரிக்க அணி 17 பந்துகளை மீதம் வைத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
