இன்றைய வானிலை அறிக்கை!

சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அம்பாறை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 km வேகத்தில் மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

நாட்டைச் சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

இதனை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply