நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி செயலிழந்து, அது கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியில் 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால், நாட்டின் சில பகுதிகளில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சில நிமிடங்களிலேயே நிலைமையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply