சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சடுதியான அதிகரிப்பு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரெண்ட் (Brent) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றுடன் (06) ஒப்பிடுகையில் 9% ஆல் அதிகரித்துள்ளதுடன், தற்போது அதன் பெறுமதி 93 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணெய் விலை இவ்வளவு உயர்வடைந்தது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் – நவம்பர் காலப்பகுதியில் மசகு எண்ணெய் விலை இவ்வாறு உயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply