இரத்மலானை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பிராந்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரிடம் இருந்து 100 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
