ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!

ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று (11) முற்பகல் காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.

காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில், காலி துறைமுகப் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply