இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதின் போது அவர்கள் பயன்படுத்திய மீன்பிடிப் படகையும் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னாரிலுள்ள கடற்படை முகாம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
