வடமாகாணத்தில் முதல் தடவையாக பச்சிலைப்பள்ளி பிரதேச பாரம்பரிய கூத்து மற்றும் இசைநாடக கலைஞர்கள் ஒருங்கிணைந்து வழங்கும் கூத்து இசைநாடகப் பெருவிழா இடம்பெறவுள்ளது.
இந்த பெருவிழாவானது 20.03.2026 அன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில் பளை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடாத்தப்படவுள்ளது.
இவ்விழாவிலே காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, அரிச்சந்திரமயானகாண்டம், சத்தியவான் சாவித்திரி, ஞானசௌந்தரி போன்ற நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
எனவே இந்நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பாரம்பரிய கூத்து மற்றும் இசைநாடகப் பெருவிழாவை கண்டுகளிக்குமாறு அழைக்கின்றோம்.
இந்த தகவலை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
