கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து நாட்டிற்கு வருகை தந்திருந்த வேளை, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைதானவர்கள் கொழும்பு 8 பகுதியைச் சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கைதான நபர்களிடம் இருந்து 1 கிலோ 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அத்துடன் போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சு மற்றும் தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட மருந்துத் தொகுதிகளும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
