ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும்!

ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்ற கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் போது, வாகனங்களை கைமாற்றிய பலர் இருந்தனர். அவர்களால் பதிவு செய்ய முடியாமல் போனது.

ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த QR முறைமையை அறிமுகப்படுத்தினோம். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் இருந்தால் BRN (வணிகப் பதிவு இலக்கம்) எனும் தனிப்பிரிவு உள்ளது.

நாட்டின் நெருக்கடியான நிலையில், ஒரு தனிநபர் இரண்டு மூன்று வாகனங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்- என டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply