ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் கடலில் நீராடிய சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹபராதுவ, ஹெண்டிவத்த பகுதியில் உள்ள கடலில் ‘சறுக்கு விளையாட்டில்’ ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது பிரதேசவாசிகள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அவர் மீட்கப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
