மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் அதிகரித்திருந்த மசகு எண்ணெய் விலைகள், இன்று (20) காலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று காலை பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.82 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.
நேற்று ஒரு பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 115 டொலரையும் விட அதிகரித்து காணப்பட்டது.
இதேவேளை, WTI மசகு எண்ணெய் பீப்பாயின் விலையும் 93.43 டொலர்கள் வரை குறைந்துள்ளது.
அதன் விலையும் நேற்று 100 டொலர்களைத் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
