இன்று மேலும் 17 பேர் குணமடைவு!

இலங்கையில் மேலும் 17 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று (18) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,060 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரை 3,276 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir