வவுனியாவில் பொதுமக்கள் முறைப்பாட்டு பெட்டிகள்

பொதுமக்கள் முறைப்பாடு மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் இன்று பிற்பகல்(18) இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் அனுசரணையில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வன்னிப்பிராந்தியத்தில் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதிகளான பேருந்து நிலையம், பிரதேச செயலகம் மாவட்டச் செயலகம் , பாடசாலைகள், வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் பொதுமக்கள் ஆலோசனை மற்றும் முறைப்பாட்டு பெட்டிகள் பொருத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இப் பெட்டிகளில் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளையும் ஆலோசனைகளையும் நேரடியாக பொலிஸ்மா அதிபருக்கு தமது பெயரைக்குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் தெரிவித்துக்கொள்ள வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

சமுதாயப் பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது . இதன் ஆரம்ப நடவடிக்கையாக பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் குறித்த தகவல் முறைப்பாட்டுப் பெட்டிகள் மன்னார் , வவுனியர் பொறுப்பதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir