அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர்.

விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கொரோனா தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டு பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட 21 நாட்களை முடித்தவுடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களிடம் வாக்குமூலத்தை பதிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir