கிளிநொச்சி மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள்.!

கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆறு அக்கராயன்குளத்திலிருந்து வான் பாயும் நீர் வெளியேறுகின்ற ஆறாகும். இது பூநகரி- குடமுருட்டி பகுதியை கடந்து கடலுக்குச் செல்கிறது.

இந்தப் பகுதியில் அதிகளவான கால்நடைகள் குறித்த ஆற்றை அண்டிய பகுதிகளில் மேச்சலில் ஈடுப்படுவதோடு, தங்களது நீர்த்தேவையினையும் பூர்த்தி செய்துகொள்கின்றன.

எனவே, இந்த ஆற்றுப் பகுதியிலேயே அதிகளவான முதலைகள் காணப்படுகின்றன. பகல்வேளைகளில் பெருமளவுக்கு ஆற்றோரமாக ஓய்வெடுப்பதனையும் அவதானிக்க முடிவதாக பிரதேசவாதிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir