மட்டக்களப்பு- முனைக்காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு வடக்கைச் சேர்ந்த 35 வயதுடைய இரத்திணசிங்கம் உதயன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir