மன்னாரில் கிடைத்த புதையலை பார்வையிட்ட சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் – நானாட்டான் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள், சட்டி ,பாணை ஓட்டுத் துண்டுகளும் அண்மையில் கண்டுப்பிடிக்கப்பட்டு முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குறித்த பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் விஜயம் செய்ததுடன் ,யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ,யாழ்ப்பாண கோட்டை புனர்நிர்மான உத்தியோகத்தர்ப.கபிலன் , யாழ்.கோட்டை அகழ்வாய்வு உத்தியோகத்தர் வி.மணிமாறன் , தொல்லியல்துறை மாணவர்கள் ச.தசிந்தன், க.கிரிகரன் ஆகியோருடன் கலந்துரையாடியுள்ளார்.

மேலும் வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் இவ் நாணயக்குற்றிகள் வரலாற்று நூல்களின் படி மீன் மற்றும் வாள் சின்னங்கள் பாண்டிய மன்னர்களுடைய முடியாட்சிக்கு உரியவையாக அறிய முடிகிறது எனவும் குறிப்பிட்டதுடன், இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இச்சந்திப்பில் நானாட்டான் பிரதேச சபை உப தவிசாளரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir