1500 இற்கு அதிகமானவர்கள் மேல்மாகாணத்தில் கைது

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 1500 இற்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதில் விசா அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 47 வெளிநாட்டவர்களுடம் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir