சஹ்ரான் ஹாஷிம் சுதந்திரமாக சுற்ற யார் காரணம் ; பூஜித் ஜயசுந்தர விசனம்

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.

அத்துடன் 2017ஆம் ஆண்டு பிடியாணை பெறப்பட்டிருந்த நிலையில் ஆர்மி மொஹிதீனை கைது செய்யமைக்கு தேசிய உளவுச் சேவை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியன இரண்டும் சமனான பொறுப்பினை ஏற்க வேண்டும்.

மேலும் தேசிய உளவுச் சேவை தனக்கு தேவையான ஒத்துழைப்புக்களை குறித்த விடயத்தில் வழங்கவில்லை எனவும், அந்த உலவுச் சேவை தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகி ஆணைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சாட்சியமலிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir