பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்த தகவல் !

ஜனாதிபதி மேற்கொள்ளும் உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவிக்கவோ அல்லது யோசனை முன்வைக்கவோ எவருக்கும் அதிகாரமிருக்கவில்லை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டு விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.

அத்துடன் புலனாய்வுத்துறையினால் வழங்கப்படும் தகவல்கள் தொடர்பில் தமக்கு செயலாற்ற பாதுகாப்பு பேரவையினால் வரையறைகள் விதிக்கப்பட்டிருந்தாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறுகின்றார்.

அது தொடர்பில் தாம் சட்டமா அதிபருடனாவது நீங்கள் கதைக்கவில்லையா என இதன் போது என ஆணைக்குழுவால் வினவப்பட்டது.

தாம் பொலிஸ் துறையில் பணிபுரிவதன் மூலம் அழுத்தங்களுக்கு பழக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir