வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர்

தற்காலிகமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் 331 பேர் நாடுதிரும்பியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் ஆகிய நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நாடுதிரும்பியுள்ள இலங்கையர்கள் அனைரும் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஊழியர்களினால் விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கென ஹம்பாந்தோட்டை மற்றும் மாரவில பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மேலும் அக்கறைப்பற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir