தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவேன் – மணிவண்ணன்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவேன் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ,

இதேவேளை அங்கு கருத்து தெரிவித்த அவர் எந்த விசாரணைகளுக்கும் நான் தயாராகவே உள்ளேன். ஆனால் அந்த விசாரணை மக்கள் மன்றத்தில் அல்லது அனைவரும் பார்க்கும் விதமாக நடக்க வேண்டும் என்று கட்சிக்கான பதில் கடிதத்தில் குறிப்பிட்டேன்”

அதே போல என்னிடம் 37 சாட்சிய ஆவணங்கள் இருக்கின்றன. விசாரணை நடத்துவதாயின் கட்சிக்கு அப்பால் நீதிபதிகளையோ அல்லது தகுதியான மூன்று பேர் கொண்ட குழுவையோ நியமிக்க வேண்டும் எனக் கோரினேன்.

ஆனால், விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் பதில் அளித்துள்ளனர். என்னில் தவறில்லை என்பதால், எனக்கு எதிராக சாட்சியங்கள் இல்லாததாலயே அவர்கள் விசாரணையை விரும்பவில்லை.

கட்சியை நிதி விவகாரங்களில் சீரான கட்டமைப்பில் வைத்திருக்க தேசிய அமைப்பாளர் என்ற முறையில் நிதிக் கட்டமைப்பை ஏற்படுத்தியதுமே என்னை விலக்குவதற்கு காரணமாக அமைந்ததுஅதனை அவர்கள் விரும்பவில்லை.

எனது தனிப்பட்ட நிதியை கட்சியின் கடனை செலுத்த வழங்கியுள்ளேன். எனது நேரத்தை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தியுள்ளேன்

You May Also Like

About the Author: kalaikkathir