அரசாங்கத்தின் அதிரடி – இன்று மூடப்படும் மதுபானசாலைகள்!

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 56 மதுவரித் திணைக்கள அலுவலகங்களின் கீழ் 900 உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தி சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir