காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்று வந்த மாணவன் திடீரென உயிரிழப்பு

காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனையில் உள்ள பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்று வரும் பதுரியா குறுக்கு வீதி, பிறைந்துறைச் சேனையைச் சேர்ந்த சமீம் முகம்மட் சஜாத் (வயது 13) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த மாணவனின் உடலிருந்து பெறப்பட்ட இரத்த மாதிரி கொரோனாத் தொற்றுப் (பி.சி.ஆர்.) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir