தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து தப்பியோடிய காவல்துறை

களுத்துறை காவல்துறை பயிற்சிக் கல்லூரியின் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து தப்பியோடிய பின்னர் மது போதையுடன் வீதியில் வீழ்ந்து கிடந்த காவல்துறை சாரதி, உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த நபர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்தவுடன் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir