பெரிய வெங்காயம் கொள்வனவு ;விவசாயிகள் கவலை

ஒரு கிலோ கிராம் வெங்காயம் 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், குறித்த தொகை தமக்கு போதுமானதாக இல்லை என்று பொலனறுவை பிரதேச பெரிய வெங்காய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தாங்கள் அதிக செலவில் பெரிய வெங்காய பயிர்செய்கையை மேற்கொண்டிருப்பதன் காரணமாக, பெரிய வெங்காயத்திற்கு நிர்ணய விலையொன்றை வழங்குமாறும் குறித்த விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில் ஒரு கிலோ உள்ளூர் பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir