இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்ட முக்கிய குற்றவாளி

ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி என கருதப்படும் மாகந்துரே மதுஷ் காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

மாலிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்த போது பொலிஸாருக்கும், பாதாள உலககுழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாகந்துரே மதுஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகந்துரே மதுஷ், இலங்கையில் நடந்த கொலைகள், பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி எனக் கூறப்படுகிறது.

துபாயில் தலைமறைவாகி இருந்த அவர், கடந்த ஆண்டு அந்நாட்டில் நடத்திய விருந்துபசாரம் ஒன்றில் போதைப் பொருட்களுடன் துபாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 31க்கும் மேற்பட்டோர் இதன் போது கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir