களுத்துறையில் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடு

களுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதவத்த, மகாலந்தாவ தெற்கு, மகுருமஸ்வில, குலா விட்ட வடக்கு மற்றும் குலாவிட்ட தெற்கு ஆகிய 5 கிராமங்களுக்கே இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தொடங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியவத்த கிராமத்திலும் சுமார் 50 வீடுகளுக்குப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்கள் தொடர்பான அறிக்கைகளை கவனத்திற்கொண்டே   குறித்த கிராமங்களுக்குப் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir