முல்லைத்தீவில் 54 பேருக்கு நியமனக் கடிதங்கள்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்கிற கொள்கைப் பிரகடத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டு வருகின்றன

இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 54 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான காதார் மஸ்தானால், இந்த நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்ப்பட்டன.

முல்லைதீவு எஸ்.எல்.ஆர்.சி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடைய கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு இந்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir