லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தம்

லிந்துலை நகரசபை தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண ஆளுநர், சட்டத்தரணி லலித் யூ.கமகேவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உடன் அமுலாகும் வகையில் நகரசபையின் தலைவர் பதவியிலிருந்து அசோக சேபால இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், தலைவர் பதவிக்கான அதிகாரங்களை செயற்படுத்துவதற்கான அனுமதி நகர சபையின் பிரதி தலைவர் லெட்சுமன் பாரதிதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir