திருத்தி முடிக்கப்பட்டன பழுதடைந்த பி.சி.ஆர் இயந்திரங்கள்

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் நிறுவப்பட்ட பி.சி.ஆர். இயந்திரத்தின் செயற்பாடானது வழமைபோல் நாளை(02) முதல் இயங்கும் என்று கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் பழுதடைந்த பி.சி.ஆர். இயந்திரம் காரணமாக சோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக சீனாவிலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரவழைக்கப்பட்டு, இயந்திரத்தின் கோளாறு அடையாளம் காணப்பட்டது.

அதன் பின்னர் சுமார் 10 மணிநேரம் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகள் காரணமாக இயந்திரம் சீர் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையிலேயே நாளை திங்கள் முதல் இயந்திரத்தின் செயற்பாடுகளானது வழமைபோல் இயங்கும் என்று கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir