ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய 153 பேர் கைது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 153 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் 117 காவல்துறை பிரிவுகளில் இதுவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில் 35 வாகனங்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த 04 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் ஆயிரத்து 633 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 253 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir