கடல் நீர் யாழ்ப்பாணத்தில் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு

யாழ்ப்பாணத்தில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய், ஊர்காவற்துறை, குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் இவ்வாறு கடல் நீர் உட்புகந்திருந்தமை தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் அது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாகவும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir