இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் மழையுடனான கால நிலை நிலவும் என அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய, வடமத்திய, ஊவா, வடமேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும், ஆங்காங்கே 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, மற்றும் ஊவா மாகாணங்களில் முகில் மேடுகளுடனான வானிலை காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir