இலங்கையில் இன்றைய தினம் 5 கொரோனா மரணங்கள்

இலங்கையில் இன்றைய தினம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இவர்களில் இருவர் ஆண்கள் எனவும் மூவர் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் கொழும்பு 01, 12, 14, 15 மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir